பிரபல பாடகரின் மரணம் – டிஎஸ்பி கைது|Death of famous singer

திஸ்பூர் ,
சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது அசாம் பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த சம்பவத்தில் அசாம் டிஎஸ்பியும், ஜுபின் கார்க் உறவினருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜுபின் கார்க் ஸ்கூபா டைவிங் செய்தபோது சந்தீபன் கார்க் உடனிருந்ததாக தகவல் வெளியானநிலையில், புலனாய்வு துறையினரின் தீவிர விசாரணைக்கு பின் சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.