நடிகர் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்டு

திருவனந்தபுரம்,
சட்ட விரோதமாக வாங்கப்பட்டுள்ளதாக, பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை விடுவிக்க, சுங்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நடிகர் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க கேரள ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 39 கார்களில், 33 கார்கள் விடுவிக்கப்பட்டன.எனினும், விசாரணை நிலுவையில் இருப்பதால் துல்கர் சல்மானின் கார் விடுவிக்கப்படவில்லை என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.