உரிய அனுமதி இல்லாமல் வேல் பூஜை…கங்கை அமரனை தடுத்து நிறுத்திய நிர்வாகிகள் |Administrators stopped Gangai Amaran from performing Vel Puja without proper permission

சென்னை,
உரிய அனுமதி இன்றி திருத்தணி முருகன் கோவிலில் வேல் பூஜைக்கு செல்ல முயன்ற இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட நிர்வாகிகளை கோவில் அலுவலர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஐபி கேட் வழியாக அனுமதி மறுக்கப்பட்டதால் ரூ. 100 கட்டணம் மற்றும் பொது வழியில் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பாத கங்கை அமரன் மற்றும் நிர்வாகிகள் கோவிலில் இருந்து திரும்பி சென்றனர்.