விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா…இப்போது எப்படி இருக்கிறார்?

ஐதராபாத்,
நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில், தான் நலமாக இருப்பதாகவும், யாரும் கவலை அடைய வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் உந்தவல்லி என்ற பகுதியில் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் நன்றாக இருப்பதாகவும், கார் மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஒரு பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தூங்கி எழுந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.