அன்று தொலைக்காட்சி தொகுப்பாளினி…இப்போது அதிக சம்பளம் பெறும் நடிகை

சென்னை,
மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படுபவர் தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர். தமிழ் , தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். அவர் நடித்த அந்த படம் ரூ. 1,000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அவர் வேறு யாருமல்ல, நயன்தாராதான். நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதன்பின், 2003-ம் ஆண்டு மலையாள படமான ‘மனசீனக்கரே’ மூலம் தனது திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார்.
நயன்தாரா 2022-ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்தார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற 2 மகன்கள் உள்ளனர். நயன்தாரா தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை. அவர் ஒரு படத்திற்கு ரூ.20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.200 கோடி சொத்து மதிப்புள்ள ஒரே தென்னிந்திய நடிகையும் நயன்தாரா தான்.