ஸ்ரீலீலாவின் "ஹுடியோ ஹுடியோ" பாடல்…புரோமோ வெளியீடு

சென்னை,
பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் “ஹுடியோ ஹுடியோ” பாடல் 8-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது அந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. ஹாய் நன்னாவின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாத் இப்பாடலை பாடியுள்ளார்.
இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய பதாகைகளின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர்.