மீனா வண்டியை திருடியது சிந்தாமணிதான் என்பதை கண்டுபிடித்த முத்து, ரோகிணியும் சிக்குவாரா?

சிந்தாமணியின் சூழ்ச்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம், ரோகிணி சிந்தாமணியிடம் சென்று, மீனாவின் அம்மா கோவிலில் வைத்திருக்கும் பூ கடையை அங்கிருந்து எடுக்கவேண்டும் என சொல்ல, அவரும் அதை செய்துவிட்டார்.
இதோடு மீனாவை விட்டுவிட கூடாது என நினைத்து, அவரது வண்டியையும் திருடிவிட்டார் சிந்தாமணி. தனது வண்டி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மீனா, போலீஸிடம் புகார் அளித்துவிட்டார்.
கண்டுபிடித்த முத்து
இதை தொடர்ந்து தற்போது தனது கணவர் முத்துவிடம் இதை பற்றி கூற, சிந்தாமணிதான் இதற்கு காரணம் என்பதை கண்டுபிடிக்கிறார்.
இதன்பின், மீனாவின் அம்மா கடையை எடுக்க சொன்னதே ரோகிணிதான் என்கிற உண்மையையும் முத்து கண்டுபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ: