பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


சென்னை,

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன் ‘. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘டியூட்’ படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ”ஊரும் பிளட்” வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் ‘டியூட்’ படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *