நான் பிரீலான்சராக பணி புரிகிறேன்- ‘பாபநாசம்’ பட நடிகை

கமல் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர் அணில். தற்போது கதாநாயகியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்தர் அணில் லண்டனில் உயர்படிப்பிற்காக சினிமா நடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டிருந்தார். இதையொட்டி அவரை பலர் கேலி செய்து விமர்சனங்கள் பதிவிட்டார். படிப்பு முடிந்து லண்டனில் இருந்து திரும்பியுள்ள எஸ்தர் அணில், ரசிகர்களுடன் சமூக வலை தளங்கள் வழியாக கலந்துரையாடினார். ரசிகர்களிடையே பேசுகையில், ‘நான் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த முதுகலைப் பட்டம் பற்றி பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலானவை ஒரு வருட முதுகலைப் பட்டம். அது முடிந்து விட்டது. ஆகஸ்டு மாதம் எனது புராஜெக்டை சமர்ப்பித்தேன். நான் அனைத்து எழுத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். இப்போது எனக்கு ஆய்வு கட்டுரையின் முடிவுகள் மட்டுமே தேவை. டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடக்கும் என நினைக்கிறேன்.
அதற்காக லண்டன் போக வேண்டும். அதற்கு பிறகு லண்டனுக்கு போகும் திட்டம் இல்லை. நான் பிரீலான்சராக வேலை செய்கிறேன். எனக்கான வாடிக்கையாளர்கள் லண்டனில் இருக்கிறார்கள். நான் என் நாட்டில் இருந்தபடி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறேன். இது என் படிப்பு பற்றிய சமீபத்திய தகவல். இவ்வாறு அவர் கூறினார்.