'கஞ்சு கனகமாலட்சுமி'… வெளியானது கிரைம் திரில்லர் படத்தின் முக்கிய அப்டேட்

சென்னை,
மல்லிகா சங்கர், கிஷோர் ராவ், கவுதம் நந்தா, அமிதா ஸ்ரீ ஆகியோர் ‘கஞ்சு கனகமாலட்சுமி’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை கணேஷ் அகஸ்தியா இயக்குகிறார். யுவன் டூரிங் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், தசரா பண்டிகையையொட்டி இப்படத்தின் ஒரு அற்புதமான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு விஜயதசமியை முன்னிட்டு பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அஜய் பட்நாயக் இசையமைக்கிறார். விழாவில் பேசிய இயக்குநர் கணேஷ் அகஸ்தியா, “இது ஒரு கிரைம் திரில்லர் படம் எனவும் கஞ்சு கனகமாலட்சுமியின் திரைக்கதை அனைவருக்கும் மிகவும் பிடிக்கு எனவும் கூறினார்.