இட்லி கடை முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! மொத்தம் இத்தனை கோடியா

தனுஷின் இட்லி கடை பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் நேற்று ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தில் தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்துகொண்டிருப்பதால் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாள் வசூல்
அதன்படி தற்போது முதல் நாள் இட்லி கடை படத்தின் வசூல் விவரம் வந்திருக்கிறது.
உலகம் முழுக்க முதல் நாளில் 10 கோடி ரூபாய்க்கும் மேலாக இட்லி கடை வசூலித்து இருக்கிறதாம். வரும் நாட்களில் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.