இட்லி கடை படத்தின் இறுதி ப்ரீ புக்கிங் வசூல் விவரம்.. இதோ

இட்லி கடை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது பாடமாக இட்லி கடையின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வெளிவந்துள்ள இட்லி கடை படத்தின் இறுதி ப்ரீ புக்கிங் வசூல் ரூ. 5+ கோடியாகும். முதல் நாள் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.