OG படப்பிடிப்பு நினைவுகளை பகிர்ந்த நடிகை பிரியங்கா மோகன்.. புகைப்படங்கள் இதோ

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் OG. பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை சுஜித் இயக்கியிருந்தார். இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்து படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய நினைவுகள் என குறிப்பிட்டு, இதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..