குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு.., விமர்சனம் எழுந்த நிலையில் காசிமாவிற்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி

குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு.., விமர்சனம் எழுந்த நிலையில் காசிமாவிற்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி


கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கியுள்ளார்.



காசிமாவிற்கு ரூ.1 கோடி



உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகையை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு பரிசுத்தொகை வழங்கவில்லை என்று பலரும் விமர்சனம் செய்தனர்.



இந்நிலையில், காசிமாவிற்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வீராங்கனை காசிமாவிற்கு தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கியுள்ளார்.



இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.


அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.



வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.

குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு.., விமர்சனம் எழுந்த நிலையில் காசிமாவிற்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி | Udhayanidhi Gave Kasima Rs 1 Cr Carrom Championsh



அவரைப்போலவே, மித்ரா 2 தங்கம், நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம்.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.


எனவே, முதலமைச்சர் உத்தரவின்படி, எம்.காசிமா -க்கு ரூ.1 கோடி, வி.மித்ரா -க்கு ரூ.50 லட்சம், கே.நாகஜோதி -க்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.


தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என்று கூறியுள்ளார்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *