கிச்சா சுதீப் நடிக்கும் “மார்க்” படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படத்திற்கு மார்க் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மார்க் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.