Karur tragedy: Mammootty, Mohanlal mourn

Karur tragedy: Mammootty, Mohanlal mourn


கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், பிரபு தேவா, கமல்ஹாசன், விஷால், கார்த்தி, சரத்குமார், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்திருக்கிறார்கள்.

“கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்” என மம்முட்டி பதிவிட்டுள்ளார்.

“கரூரில் நடந்த சம்பவம் துன்பமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்.” என மோகன்லால் பதிவிட்டுள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *