என் மனம் படுகிற வேதனை.. உயிரிழந்தவர்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்த விஜய்

கரூர் சம்பவம்
கரூரில் தவெக-வில் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விமான நிலையத்தில் விஜய்யிடம் கேள்வி எழுப்பியும் அவர், பதிலளிக்காமல் போனது அனைவருக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். பின் இறந்தவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ரூ. 20 லட்சம் நிதியுதவி
இதில், “”கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிக காணாது போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெறுதுர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனதும் கலக்கி தவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 20 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் ரூ. 2 லட்சமும் நிதியுதவி என விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், “இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தை சேர்ந்தவனாக என் கடமை” என தெரிவித்துள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே…
— TVK Vijay (@TVKVijayHQ) September 28, 2025