இந்தியாவின் ஆஸ்கர் நுழைவு படத்திற்கு மோசமான தொடக்கம்|Homebound: India’s Oscar entry film takes a dismal opening

இந்தியாவின் ஆஸ்கர் நுழைவு படத்திற்கு மோசமான தொடக்கம்|Homebound: India’s Oscar entry film takes a dismal opening


சென்னை,

ஆஸ்கர் விருதுக்கு சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து ”ஹோம்பவுண்ட்”என்ற இந்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நீரஜ் கய்வான் இயக்கிய இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, இருப்பினும் முதல் நாளில் ரூ. 30 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்கள் நடித்திருந்தும், படத்தை பற்றி பலருக்கு தெரியாததும், புரமோஷன் இல்லாததும் இந்த மோசமான துவக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஹோம்பவுண்ட் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *