மகளுடன் நடிகை ஸ்ரேயா சரண் அழகிய போட்டோஷூட்.. வைரலாகும் புகைப்படங்கள்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ஸ்ரேயா சரண் இருக்கிறார். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்த ஆண்டு சூர்யாவின் நடிப்பில் தமிழில் வெளிவந்த ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ரேயா சரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர். இந்த நிலையில், தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.