லோகா படத்தின் இரண்டாம் பாகம்.. மிரட்டலான அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான்

லோகா
2025ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றாக லோகா மாறியுள்ளது. மலையாள திரையுலகில் உருவாகி வெளிவந்த இப்படத்தை இயக்குநர் டொமினிக் அருண் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக, மிரட்டலான ஆக்ஷன் ஹீரோயினாக பட்டையை கிளப்பினார். மேலும் இப்படத்தில் சாண்டி மாஸ்டர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் வரவேற்பை பெற்றார்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இரண்டாம் பாகம்
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான துல்கர் சல்மான் லோகா படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.






