நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது ரூ.60 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் இந்த தொகையில் ரூ.15 கோடியை ஷில்பாஷெட்டி நிறுவனத்திற்கு ராஜ்குந்த்ரா மாற்றி உள்ளார்.
எனவே ராஜ்குந்த்ராவை மீண்டும் அழைக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வார இறுதிக்குள் ராஜ்குந்த்ராவை மீண்டும் விசாரணைக்கு அழைக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஷில்பா ஷெட்டியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.