சில பாலோவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்- நடிகை கோமல் சர்மா | Don’t ruin your life for a few followers

சில பாலோவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்- நடிகை கோமல் சர்மா | Don’t ruin your life for a few followers


சென்னை,

சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் விழிகள். படத்தின் கதாநாயகனாக மகேந்திரா, இன்னொரு கதாபாத்திரத்தில் சிக்கர் ராஜேஷ், கதாநாயகியாக நீமாரே மற்றும் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதிகும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர சந்திரபாபு, கிரி ராமச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.எம்.அசார் இசையமைத்துள்ளார். மகேந்திரா பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகை லீமோரே பேசுகையில், “படப்பிடிப்பில் சில காட்சிகள் திருப்தி இல்லையென்றால் படப்பிடிப்பு முடிந்து 2 வாரம் கழித்து கூட என்னை அழைத்து சில காட்சிகளை மீண்டும் படமாக்கினார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இரவின் விழிகள் படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்பு இயக்குனர் ராஜேஷ் அம்பி போலவும், படப்பிடிப்பு தொடங்கி விட்டால் அந்நியனாகவும் மாறிவிடுவார்” என பேசினார்.

நடிகை கோமல் சர்மா பேசுகையில், இன்றைய இளைஞர்களின் போர்களமே வேறு. அது துப்பாக்கியோ வாளோ அல்ல. ஒரு போஸ்ட்… ஒரு டுவீட்… ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு வழிகாட்டி. ஒரு சில பாலோவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *