சமந்தா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை இத்தனை லட்சமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் ”குஷி” படத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் பிறகு எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.
தயாரிப்பாளராக மாறி ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்திருந்தார். அதில் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் பல பிராண்டுகளுக்கு சமந்தா விளம்பர தூதராகவும் உள்ளார். இந்நிலையில் சமந்தா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமந்தா அணிந்திருப்பது சாம்ட்ரெப்–சாய்டல் வடிவிலான பியாஜெட் கடிகாரம். அந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.30 லட்சத்துக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.