Now, a new education policy is needed, just as if a thumb was asked for as an offering – Director Thiagarajan Kumararaja | கட்டைவிரலை காணிக்கையாக கேட்டதுபோல இப்போது புதிய கல்விக் கொள்கை

சென்னை,
தமிழக அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ என்ற திட்டமும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டு, மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன்” திட்டங்களின் தொடக்கவிழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்தியேகன் “கல்விக்கு 2 குணங்கள் உண்டு. கல்வி சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவரை மேல்மட்டத்தில் உள்ளவருடன் சமமாக மாற்றும். இதனால்தான் இடைக்காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்டது. கல்வி, வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது. ஒருவர் கற்ற கல்வி மற்றவருக்கு பணம் மற்றும் கல்வி கற்பித்தலாக சென்றடைகிறது.
ஆரிய கருத்தியல் என்ன சாதி? என்று கேட்டு கற்பிக்கும் முறையாக இருக்கிறது. துரோணர் முதல் ராஜாஜி வரை சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவரை கல்வி கற்பதை தடுத்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், திராவிட கருத்தியலில் எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோரும் அறிவாளியாக இருக்க வேண்டும். சமத்துவமும், சமூகநீதியும் உள்ள கட்சி எல்லாரையும் படிக்க வைக்க பல திட்டங்களை செயல்படுத்துகிறது. கட்டணமில்லா பேருந்து, இலவச கல்வி, நான்முதல்வன் போன்ற பல திட்டங்கள் மூலம் தமிழக அரசு எல்லோரும் கல்வி கற்பதை செயல்படுத்துகிறது. ஆனால், இப்போது ஆரிய கருத்தியல் உள்ள கட்சி சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கல்வி கற்பதை தடுக்க ஏகலைவனிடம் கட்டை விரலை காணிக்கை கேட்டது போல, கற்றது எல்லாம் மறந்துபோக வேண்டும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்ததைப் போ இப்போது புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளனர் ” என்றார்.