"வட சென்னை 2''- தனுஷ் சொன்ன வார்த்தை…அரங்கத்தை அதிர விட்ட ரசிகர்கள்

மதுரை,
மதுரையில் நடந்த ‘இட்லி கடை” படத்தின் பிரீ ரிலீஸ் விழாவில் பேசிய தனுஷ் ”வடசென்னை 2” படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்தார்.
”வட சென்னை 2” படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், படம் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தனுஷ் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் ”இட்லி கடை”. தனுஷே இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.