நடன இயக்குனர் கைகளில் நான் நரகத்தை கண்டேன்

சென்னை,
சமூகத்தில் பெண்கள் பலர் சைக்கோ காதலன் மற்றும் கணவன் கைகளில் சிக்கி பல்வேறு கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில் கொடூரகாரர்களின் கோரமுகங்களும் ஆங்காங்கே வெளிப்பட்டு வருகின்றன. சொல்ல முடியாத கொடுமைகளுக்கு சினிமாத்துறையை சேர்ந்த பல பெண்களும் ஆளாகி வருகின்றனர்.
பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மாவின் வங்க வீதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நைனா கங்குலி. முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில் ரத்னகுமாரி படம் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நைனா கங்குலியின் தனிப்பட்ட வாழ்க்கை பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் காதலனின் கைகளில் நான் நரகத்தை கண்டேன். நடன இயக்குனரான அவர் என்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பயங்கரமாக இருந்து என் வாழ்க்கையையே நாசமாக்கியது. நான் காதலில் விழுந்ததற்கு தகுதியான தண்டனை கிடைத்தது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளுக்காக நான் ஐதராபாத்தை விட்டே வெளியேறினேன். என்னைப் போன்று கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்கள் அத்தகைய உறவில் இருந்து வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.