”96” படத்தின் 2ம் பாகம் – மனம் திறந்த இயக்குனர் பிரேம் குமார்|Part 2 of the movie ”96”

சென்னை,
’96’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி பிரேம் குமார். விஜய் சேதுபதி, திரிஷா நடித்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதனையடுத்து, அதன் 2-ம் பாகம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், 2ம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக இயக்குனர் பிரேம் குமார் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,
”96 படத்தின் 2ம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். நான் எழுதியதில் மிகவும் சிறந்த கதை இது. 96 படத்தின் முதல் பாகத்தை விட இது அற்புதமாக இருக்கும். அதே நடிகர்களை வைத்தே 2ம் பாகத்தையும் எடுக்க விரும்புகிறேன். இல்லையெனில் இந்த படத்தை எடுக்க மாட்டேன்” என்றார்.