நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை- நடிகை சாக்சி அகர்வால் | I have never eaten non-vegetarian food in my life

நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை- நடிகை சாக்சி அகர்வால் | I have never eaten non-vegetarian food in my life


தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்சி அகர்வால். இவர் கடந்த ஞாயிற்று கிழமை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தான் ஆர்டர் செய்த சைவ உணவில் சிக்கன் கிடந்ததாக தெரிவித்து, இதற்கு காரணமான ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக, தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்விக்கி மூலம் நான் பனீர் ஆர்டர் செய்திருந்தேன்; ஆனால் வந்ததோ சிக்கன். நான் என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை. ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்தது, பனீரின் சுவையிலும் வித்தியாசம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு சோதித்து பார்த்தேன். அது சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்.

நான் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு, சைவம் அசைவம் உண்பவர்களுக்கு இடையேயான பிரச்சினையோ, இந்துக்கள் – இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்சினையோ இல்லை. இது வாடிக்கையாளருக்கும் மோசமான வாடிக்கையாளர் சேவைக்குமான இடையே உள்ள பிரச்சினை.

உணவென்பது ஒருவரின் தனியுரிமை. அதில் அசைவம் சாப்பிடாதது என் உரிமை. உணவு என்பது நம் உணர்வு மட்டுமன்றி, நம்பிக்கை, கலாசாரம், மத உணர்வுகளையும் சார்ந்தது என்பதால் இப்படியான தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *