பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்? யார் பாருங்க

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 9ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி தான் இந்த சீஸனும் தொகுத்து வழங்க போகிறார்.
மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என உத்தேச பட்டியலும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இவருமா..
சீரியல் நடிகை ஜனனி, ஃபரினா ஆசாத், நடிகர் சித்து, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் பிக் பாஸ் வீட்டுக்கு வர போகிறார் என்பது தான்.
இருப்பினும் இது உத்தேச போட்டியாளர் லிஸ்ட் தான். அவர் வருவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.