மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரோபோ ஷங்கர்

ரோபோ ஷங்கர், கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கூறப்படும் ஒரு பெயர்.

மஞ்சள் காமாலை நோயால் சில வருடங்கள் முன் பாதிக்கப்பட்டவர் இப்போது தான் உடல்நிலை சரியாகி மீண்டும் நடிக்க வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள் என பிஸியாக இருந்த ரோபோ ஷங்கர் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Late Actor Robo Shankar Net Worth Details

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.


46 வயது இறக்கும் வயது கிடையாது என பலரும் மனம் வருந்தினார்கள்.

சொத்து மதிப்பு

ரோபோ ஷங்கர் அவர்களின் மறைவுக்கு பின் அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனம் ஆடியது சர்ச்சையாக பேசப்பட்டது.

ரோபோ ஷங்கர்-பிரியங்கா காதல் நடனத்தின் மூலம் ஆரம்பித்ததால் தனது காதல் கணவருக்கு நடனத்தின் மூலம் அவர் அஞ்சலி செலுத்தினார் என பலரும் கூறி வருகிறார்கள்.

மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Late Actor Robo Shankar Net Worth Details

இந்த நிலையில் நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைத்த ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *