''மர்தானி 3'' – வைரலாகும் படத்தின் பர்ஸ்ட் லுக்

சென்னை,
ராணி முகர்ஜியின் ”மர்தானி” படத்தின் முதல் இரு பாகங்களைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் அடுத்தாண்டு வெளியாகிறது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் அதிரடித் திரைப்படம் ”மர்தானி 3”. இதில் ராணி முகர்ஜி சூப்பர் காப் ஷிவானி சிவாஜி ராயாக மீண்டும் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரியையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மர்தானி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதனை மறைந்த பிரதீப் சர்க்கார் இயக்கினார். இது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதையடுத்து, 2-ம் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.