நடிகை அனுஷ்கா கெரியர் நாசமாக காரணமான படம்!

நடிகை அனுஷ்கா கெரியர் நாசமாக காரணமான படம்!

நடிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோயினாக இருந்தார். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி அருந்ததீ போன்ற பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வந்தார்.

ஆனால் அவர் எடுத்த ஒரே ஒரு முடிவு மொத்த கெரியரையும் காலி செய்துவிட்டது என ரசிகர்கள் தற்போதும் கூறி வருகிறார்கள். இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் அவர் தனது உடல் எடையை கூட்டி நடித்த பிறகு அவர் அதிகம் குண்டாகி அதன் பின் எடையை குறைக்க முடியாமல் போனது. அதனாலேயே அவர் படங்கள் எதிலும் நடிக்காமல், வெளியில் எந்த நிகழ்ச்சிகளுக்கு கூட வராமல் இருக்கிறார்.

அதனால் அனுஷ்காவின் கெரியரை அழித்த படம் இது தான் என நெட்டிசன் ஒருவர் X தளத்தில் பதிவிட அதற்கு நடிகை சுனைனா கமெண்ட் செய்து இருக்கிறார்.

நடிகை அனுஷ்கா கெரியர் நாசமாக காரணமான படம்! - நடிகை சுனைனா காட்டமான பதிவு | Sunaina About Anushka Career And Size Zero

சுனைனா பதிவு

“மரியாதையுடன், இதை வேறு விதமாக பார்க்க வேண்டும். நடிகர்கள் experiment செய்ய வேண்டும். அது வேகத்தை குறைத்து இருந்தாலும், எதையும் நாசமாக்கவில்லை.”

“விரும்பத்தக்க தோற்றம் என்ற ஒன்றை அது பாதித்து இருக்கலாம், ஏனென்றால் படம் சரியாக போகவில்லை என்பதால். ஆனால் அவரது திறமை அப்படியே தான் இருக்கிறது.”

“கலை பற்றி நீங்கள் யோசிப்பதை இன்னும் விரிவு படுத்துங்கள். அனுஷ்கா அற்புதமாக இருந்தார், அதற்கு பிறகும் அற்புதமாக தான் இருக்கிறார்” என சுனைனா பதிவிட்டு இருக்கிறார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *