முதியவரை காக்க வைத்த அரசு ஊழியர்கள்; அதிகாரி கொடுத்த நூதன தண்டனை – வைரலாகும் வீடியோ

முதியவரை காக்க வைத்த அரசு ஊழியர்களுக்கு அதிகாரி வழங்கிய நூதன தண்டனை வைரலாகி வருகிறது.
அரசு அலுவலகம்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், நொய்டா குடியிருப்பு வீட்டு வசதித்துறை அரசு அலுவலகம்(noida authority) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பல்வேறு சேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். பலரும் ஊழியர்கள் பொதுமக்களை மதிப்பதில்லை, நீண்ட நேரம் காக்க வைக்கின்றனர் என புகார் அளித்தனர்.
முதியவர் காக்க வைப்பு
இதனையடுத்து ஓக்லா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தில் சுமார் 65 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற லோகேஷ் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டாம் விரைவாக பணிகளை முடித்து கொடுக்குமாறு அறிவுரை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த லோகேஷ், ஒரு ஊழியரை அனுப்பி அந்த முதியவரை நீண்ட நேரம் நிற்க வைக்கவேண்டாம், வேலையை விரைவாக முடித்து கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நூதன தண்டனை
20 நிமிடங்கள் கழித்து மீண்டும் கண்காணிப்பு கேமராவில் அந்த முதியவர் அதே இடத்தில் வரிசையில் நிற்பதை பார்த்துள்ளார். முதியவருக்கு உதவுமாறு கூறியும் ஊழியர்கள் யாரும் அந்தப் பணியைச் செய்யாததால் கோபமடைந்த தலைமை நிர்வாக அதிகாரி உடனடியாக அங்கு வந்த அனைத்து ஊழியர்களையும் 20 நிமிடம் எழுந்து நின்று வேலை பார்க்க கூறியுள்ளார்.
#SocialMedia
Noida Authority CEO Imposes Unique Punishment on Staff for Delayed Service to Elderly VisitorRead On-https://t.co/0b3tmFgJwp@CeoNoida @noida_authority #IASOfficer #News #Bureaucracy @CP_Noida #NoidaNews #CEO #NoidaAuthority #Service pic.twitter.com/oVlANdB6hj
— Indian Masterminds (@i3masterminds) December 18, 2024
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு தண்டனை கொடுப்பதன் மூலம் அரசு ஊழியர்கள், தவறை உணர்ந்து வருங்காலத்தில் ஒழுங்காகப் பணியாற்றுவார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.