''செயற்கை நுண்ணறிவை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்'' – ஜான்வி கபூர்

சென்னை,
நடிகை ஜான்வி கபூர், செயற்கை நுண்ணறிவை ( AI) சிலர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு( AI) செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதை வைத்து மார்பிங் செய்யப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் ஆன்லைனில் பரப்பப்படுவதாக கூறினார்.
இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வரும் ஜான்வி கபூர், சிலர் தனது படங்களை எடுத்து, அதை செயற்கை நுண்ணறிவு( AI) செயலிகளை பயன்படுத்தி அசிங்கமாகக் வெளியிடுவதாக கவலை தெரிவித்தார்.
இது போலி என்று தனக்கு மட்டுமே தெரியும் எனவும், ஆனால் மக்கள் அது உண்மை என நினைப்பதாகவும் அவர் கூறினார்.