”அப்போதும், இப்போதும் அனுஷ்கா அற்புதம்தான் – நடிகை சுனைனா|Anushka was amazing before and still is amazing

சென்னை,
இஞ்சி இடுப்பழகி படத்திற்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சினிமா வாழ்க்கை பாதிப்படைந்துவிட்டதாக பதிவிட்ட எக்ஸ் பயனருக்கு நடிகை சுனைனா பதிலளித்துள்ளார்.
சுனைனா வெளியிட்ட பதிவில், “இதை வித்தியாசமாகப் பார்ப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். நடிகர், நடிகைகள் புதிய வித்தியாசமான கதாபாத்திரம் கதைகளை பரிசோதிப்பது முக்கியம். அது, அவர்களின் வேகத்தை குறைக்கலாம், ஆனால் அது எதையும் அழிக்காது.
கலைத்திறனைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றுங்கள். அனுஷ்கா முன்பு அற்புதமாக இருந்தார்… இப்போதும் அற்புதமாக இருக்கிறார்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
சுனைனா, சமீபத்தில் சேகர் கம்முலாவின் குபேராவில் , நாகார்ஜுனாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மறுபுறம், அனுஷ்கா சமீபத்தில் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கிய ”காதி” படத்தில் நடித்தார். வானம் (2011) படத்திற்குப் பிறகு அனுஷ்கா மற்றும் கிரிஷ் மீண்டும் இணைந்த படம் இது.
அடுத்து ஜெயசூர்யாவுடன் இணைந்து ”கத்தனார்” படத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.