Chicken in paneer! Actress Sakshi Agarwal angry post

சென்னை,
மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். ‘ராஜா ராணி’, ‘காலா’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ‘பகீரா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவருக்கான ரசிகர்களும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், சாக்ஷி அகர்வால் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சைவ ஆர்டர் செய்த உணவில் சிக்கன் கிடைத்தது. இப்போதுதான் உணவைத் தூக்கியெறிந்தேன். இதற்கு ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்ல வேண்டும். என் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் சாக்ஷி அகர்வாலின் உணவில் சிக்கன் துண்டுகள் இருந்ததற்கு சம்பந்தப்பட்ட உணவகத்துடன் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எச்ஆர்எக்ஸ் பிட்னஸ் நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு வருவதால், ஹிருத்திக் ரோஷனையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சாக்ஷி.