போட்டி நடிகர்கள் சினிமாவையே அழிக்க முயற்சிக்கிறார்கள்.. நடிகர் வடிவேலு யாரை சொல்கிறார்?

நடிகர் வடிவேலு பல விஷயங்களை ஓப்பனாக பேச கூடியவர். இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசிய விஷயம் வைரல் ஆகி இருக்கிறது.
“சில நடிகர்கள் தங்கள் படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக போட்டி நடிகர்களின் படங்களுக்கு நெகடிவ் விமர்சனங்கள் வர வைத்து தோல்வி அடைய வைக்கிறார்கள்.”
சினிமாவையே அழிக்கிறார்கள்..
ஒரு 10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதை நடிகர் சங்கம் தடுக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார்.
மேலும் படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டரில் ரசிகர்களிடம் விமர்சனம் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் எனவும் வடிவேலு கேட்டுக்கொண்டிருக்கிறார்.