நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்|Resolutions passed at the Actors’ Association General Committee

சென்னை,
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திரைத்துறைக்கு நன்மை செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய நடிகர் ரஜினிக்கும் பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நடிகர் சங்க ஆண்டறிக்கை, வரவு-செலவு அறிக்கைக்கு ஒப்புதல், சட்ட ஆலோசகராக கிருஷ்ணா ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டார். மேலும், நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.