விஜய் அரசியலில் ஜெயிப்பாரா.. இட்லி கடை விழாவில் நடிகர் பார்த்திபன் பேச்சு வைரல்

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்.
திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி தொடர்ந்து ஸ்டாலின் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவதும், அதற்கு திமுகவினர் பதில் கொடுப்பதுமாக அரசியல் வட்டாரமே விஜய்யால் தொடர்ந்து பரபரப்பில் இருக்கிறது.
பார்த்திபன் பேச்சு
இந்நிலையில் நேற்று நடந்த இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் பேசும்போது விஜய் பற்றி மறைமுகமாக பேசினார்.
“விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கு” என பார்த்திபன் கூற, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் விஜய் கட்சி பெயரை கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர்.