தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் மாயக்கூத்து! இந்த வாரம் ஓடிடி தளத்தில்…

தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் மாயக்கூத்து! இந்த வாரம் ஓடிடி தளத்தில்…


எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே கதையின் மையக் கரு..மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு ஏற்ற நடிப்பும், அழுத்தமும் கொண்ட புது முகங்கள் இந்த படத்தின் வலுவாக விளங்குகின்றன.

இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார். நாகராஜன் கண்ணன், வாசன் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.

சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் நடிப்பும், திரைப்படத்தின் உணர்வுப் பாசறையை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே சித்திரவதை இல்லாமல், கதைக்கு தேவையான அந்தஸ்தில் இசையை கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

மாயக்கூத்து என்பது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டிலும், மிகப்பெரிய உள்ளடக்கம் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் உதாரணம். இது ஒரு வெறும் திரைப்படம் அல்ல, இது ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னம்.

இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் மட்டும்தான் வாழ வைக்க முடியும். மாயக்கூத்து போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கினால் தான், புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியிடப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *