இளைஞர்களுக்கு தனுஷ் சொன்ன அட்வைஸ்|IdliKadai – Dhanush’s Advice for Youngsters

இளைஞர்களுக்கு தனுஷ் சொன்ன அட்வைஸ்|IdliKadai – Dhanush’s Advice for Youngsters


கோவை,

கோவையில் நடந்த ‘இட்லி கடை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது தனுஷ் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. இளஞர்களுக்கு அவர் சில அட்வைஸ்களை கொடுத்தார்.

அவர் கூறுகையில், ”நாம் வாழ்க்கையில் என்னவாக ஆக விரும்புகிறோம், என்ன சாதிக்க விரும்புகிறோம், என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே அது நடந்துவிட்டதாக நம்ப வேண்டும்.

அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது, நிச்சயமாக யாரு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதெல்லாம் இலக்குக்கு உங்களை சீக்கிரமாகவே கொண்டு செல்லும்.

கருத்து சொல்வதாக நினைக்காதீர்கள். என் வாழ்க்கையில் எனக்கு நடந்ததை சொல்கிறேன். கண்டிப்பாக இதையெல்லாம் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். ”இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *