“சக்தித் திருமகன்” படத்தின் முதல் நாள் வசூல் விவரம்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தனது 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு தெலுங்கில் ‘பத்ரகாளி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிப்தி கதாநாயகியாக நடித்துள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் நேற்று வெளியானது. ‘சக்தித் திருமகன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.‘சக்தித் திருமகன்’ படத்தின் “இந்தபடை போதுமா” பாடல் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், முதல் நாள் ‘சக்தித் திருமகன்’ படம் உலகளவில் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சக்தித் திருமகன்’ படம் முதல் நாள் உலகளவில் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது.