வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்த நட்சத்திர நடிகை…யார் தெரியுமா?|Do you know who the star actress is who left her job in banking and entered the cinema?

வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்த நட்சத்திர நடிகை…யார் தெரியுமா?|Do you know who the star actress is who left her job in banking and entered the cinema?



மும்பை,

திரையுலகில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமன ஒன்று. ஆனாலும் பலர் அதற்கு ஆசைப்படுகிறார்கள். சிலர் வேறு துறையில் வேலை செய்துகொண்டிருந்தபோதும் அதை விட்டுவிட்டு சினிமாவில் நுழைகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று ‘நட்சத்திரங்களாக’ மாறி இருக்கிறார்கள். இந்த நடிகையும் இதில் ஒருவர்தான். அவர் வேறு யாரும் இல்லை சோஹா அலி கான்தான்.

புகழ்பெற்ற நடிகை ஷர்மிளா தாகூர், கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடியின் மகள் சோஹா அலி கான். இவர் நட்சத்திர ஹீரோ சைப் அலி கானின் சகோதரியும் கூட. இருந்தபோதிலும், அவர் திரைப்படத் துறையில் இருந்து விலகியே இருந்தார்.

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த சோஹா, பின்னர் மும்பைக்கு வந்து ஒரு சர்வதேச வங்கியில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில், அவரது சம்பளம் மாதம் ரூ. 18 ஆயிரம் மட்டுமே. மும்பையில் அவர் வசித்த வீட்டின் வாடகை ரூ. 17,000. அப்படியிருந்தும், அவர் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த வேலையை செய்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில், வங்கி வேலை செய்து கொண்டிருந்தபோது, சோஹாவின் மனம் திரைப்படத் துறையின் மீது திரும்பி இருக்கிறது. திரைப்பட வாய்ப்புகளைத் தேடி, மாடலிங்கில் நுழைந்திருக்கிறார். அப்போது , ஒரு திரைப்பட வாய்ப்பு வந்தது. ‘தில் மாங்கே மோர்’ (2004) படத்தில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் ரூ. 10 லட்சம்.

உண்மையில், இந்த படத்திற்கு முன்பு ஷாருக்கானின் ‘பஹேலி’ படத்தில் சோஹா நடிக்கவிருந்தார். ஆனால் ஏதோ காரணத்தால், அந்த திட்டம் ராணி முகர்ஜியிடம் சென்றது. பின்னர், ஷாஹித் கபூருடன் ‘தில் மாங்கே மோர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்குப் பிறகு, சோஹாவுக்கு பாலிவுட்டில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன.

சில வருடங்களுக்குள் அவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ரங் தே பசந்தி, அஹிஸ்தா அஹிஸ்தா, கோயா கோயா சந்த், மும்பை மேரி ஜான், 99, சாஹேப், பிவி அவுர் கேங்ஸ்டர் ரிட்டர்ன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். சோஹா அலி கான், கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் குணால் கெமுவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இனயா என்ற மகள் உள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *