மிராஜ் திரை விமர்சனம் – சினிஉலகம்

மலையாள திரையுலகில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் காட் பாதராக விளங்கும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்துள்ள மிராஜ் மீண்டும் ஜீத்துவை சஸ்பென்ஸ் திரில்லர் கதையின் கிங் ஆக நிரூபித்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே கிரன் என்பவர் தன் கம்பெனியின் டேட்டா-வை திருடிக்கொண்டு ட்ரெயினில் தப்பிக்கிறார். அப்படி தப்பிக்கும் போது அந்த இரயில் விபத்தில் அவர் இறக்கிறார்.
அதை தொடர்ந்து அவர் திருடிய டேட்டா அந்த கம்பெனி இல்லீலல் வேலையை எடுத்துள்ளார் என தெரிய வர, கிரனின் காதலி அபர்னாவை போலிஸும், அந்த கம்பெனி அடியாளும் துரத்துகின்றனர்.
அவருக்கு எதுவும் தெரியவில்லை, அதே நேரத்தில் ஹீரோ ஆசிப் அலி ஒரு யூடியூப் வைத்து இது போன்ற விஷயங்களை தேடி அதை மக்கள் முன்பு கொண்டு வருபவர்.
அவர் அபர்னாவை தொடர்புகொண்டு இதுக்குறித்து விசாரித்து, அந்த டேட்டா அடங்கிய Pen drive தற்போது எங்கே என தேடி செல்ல பல டுவிஸ்ட்-கள் அவிழ பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜீத்து ஜோசப் படம் என்றாலே தேடல், எதிர்ப்பாரத திருப்பம் என எதை விரும்பி போவார்களோ அது அனைத்தும் உள்ளது, படத்துல டுவிஸ்ட் இருக்கலாம், ஆனால், இதில் டுவிஸ்டில் தான் படமே உள்ளது.
கிரன் இறந்தார் அவர் மறைத்து வைத்துள்ள Pen drive-யை தேடி செல்லும் அபர்ணா, அவருக்கு உதவியாக வரும் நாயகன் ஆசிப் அலி. இப்படியாக தொடங்கும் படத்தில் முதல் டுவிஸ்ட் கிரனிடமிருந்து ஆரம்பிக்கிறது.
அதிலிருந்து அடுத்த டுவிஸ்ட் அபர்ணா தோழி, சரி இது என்னடா புது டுவிஸ்ட் என உட்கார்ந்தால், அபர்னாவிடமே ஒரு டுவிஸ்ட் வருகிறது, இதையெல்லாம் ஆசிப் அலி பிரமிப்பாக பார்க்கிறார், அப்போ நம்ம தான் ஒன்னுமே தெரியாமல் இருக்கிறோமோ என்று ஆடியன்ஸ் போல் தான் அவர் மனநிலையும் உள்ளது.
ஒரு பக்கம் போலிஸ், இன்னொரு பக்கம் அடியாட்கள் அந்த Pen drive ஆக அபர்ணாவை துரத்த, அவரின் பரிதவிப்பு பார்க்கும் நமக்கு மிகவும் பரிதவிப்பு ஆகிறது, சிறப்பாக நடித்துள்ளார்.
படம் தமிழகத்தில் தான் நடப்பதால் பெரும்பாலான காட்சிகளில் தமிழில் தான் பேசுகிறார்கள், அதனால் கண்டிப்பாக தமிழ் ஆடியன்ஸும் தியேட்டரில் சென்று பார்க்கலாம்.
ஜீத்து ஜோசப் படம் முழுவதும் சீன்-க்கு சீன் எதிர்பாரத திருப்பம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து படத்தை எடுத்திருப்பார் போல, படத்தில் எதாவது அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் வந்தாலும் ஒருவேளை இவர் எதாவது செய்திருப்பாரோ என ஆடியன்ஸை நினைக்க வைப்பது, ஒரு கட்டத்திற்கு மேல் அட போங்கப்பா என்றும் ஆகிறது.
படத்தின் நாயகன் ஆசிப் என்ன எதோ குணசித்திர நடிகர் போல் வருகிறார், எதற்காக இப்படி ஒரு கதாபாத்திரம் தேர்ந்தெடுத்தார் என நினைத்தால் அதில் ஒரு டுவிஸ்ட் வைத்தார்கள் பாருங்க…
ஆடியன்ஸ் மொத்தமும் ஷாக் தான்.
டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிராமதம்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி
அபர்ணாவின் நடிப்பு
பல்ப்ஸ்
காட்சிக்கு காட்சி டுவிஸ்ட் என்பது சுவாரஸ்யம் என்றாலும், அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் போதும்பா என சொல்லும் நிலை உள்ளது.