விபத்தில் சிக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வார் 2 படம் ரிலீஸ் ஆகி இருந்தது.
இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் அவர் இணைந்து நடித்து இருந்தார். ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
ஷூட்டிங்கில் விபத்து
தற்போது ஜூனியர் என்டிஆர் விளம்பரம் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறார். அவர் காயங்கள் உடன் மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருகிறாராம்.
அவரது உடல் கண்டிஷன் stable ஆக இருக்கிறது என நடிகரின் டீம் தெரிவித்து உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கலாம்.