40 வயதில் திருமணம் செய்து கொள்ளப்போகும் ரஜினி பட நடிகை?|Rajinikanth, Ajith actress to get married at 40?

மும்பை,
விரைவில் பிரபல நடிகை ஒருவர் திருமண வாழ்க்கையை துவங்க போகிறார். சமீபத்தில், தனது காதலனுடன் அவருக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகை வேறு யாருமல்ல , ரஜினிகாந்தின் காலா மற்றும் அஜித்தின் வலிமை படங்களில் நடித்த ஹுமா குரேஷிதான் . தெலுங்கு , இந்தி , மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த இந்த நடிகை , நடிப்பு பயிற்சியாளர் ரச்சித் சிங்கைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது .
ஹுமா குரேஷியும் ரச்சித்தும் கடந்த ஆண்டு முதல் பல திரைப்பட நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர் . பாலிவுட் நடிகை சோனாக்சியின் திருமணத்திலும் அவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர் . சமீபத்தில் டொராண்டோ திரைப்பட விழாவிலும் அவர்கள் ஜோடியாக கலந்து கொண்டனர் . இருப்பினும், தங்கள் உறவைப் பற்றி அவர்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது , இவர்கள்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக இணையத்தில் பேச்சு எழுந்துள்ளது.
‘கேங்க்ஸ் ஆப் வாஸேபூர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹுமா குரேஷி . பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இந்த நட்சத்திரம் , மலையாளத்தின் வெள்ளை, தமிழில் அஜித்தின் ‘வலிமை’ மற்றும் ரஜினிகாந்தின் ‘காலா’ படங்களிலும் நடித்துள்ளார் . ‘ மகாராணி’ என்ற வெப் தொடரின் மூலம் நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றார் .
ரச்சித்தைப் பொறுத்தவரை , அவரது சொந்த ஊர் உத்தரபிரதேசம் . டெல்லியில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . பின்னர் 2016 இல், அவர் மும்பைக்கு வந்து நடிப்பு பயிற்சியாளராக ஆனார் .