”வேறு யாரையும்போல வாழ முயற்சிக்காதீர்கள்” – விஜய் தேவரகொண்டா|”Don’t try to live like anyone else”

ஐதராபாத்,
ஒரு காதல் படமாகத் திரைக்கு வந்து, தற்போது பார்வையாளர்களை ஈர்த்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ள படம் ”லிட்டில் ஹார்ட்ஸ்”.
வெறும் 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் புது முகங்களான மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாய் மார்த்தாண்ட் இயக்கியுள்ளார்
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது அனைவைரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் பேசுகையில்,
”ஒரு நடிகரான பிறகு, புது முக நடிகர்களின் வெற்றியைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். இப்போது இவர்கள் எந்த பின்னணியும் ஆதரவும் இல்லாமல் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதை நாம் பாராட்ட வேண்டும். இன்று மவுலியைப் பார்த்து, பலர் நாமும் ஒரு நடிகராக முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவார்கள்” என்றார்.
மேலும் பேசிய அவர், ”யாருடைய அறிவுரையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வேறு யாரையும் போல வாழ முயற்சிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள்” என்றார்.