ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் அப்டேட்

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை, தர்மதுரை, கனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுனுடன் இணைந்து தீயவர் குலை நடுங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். னேஷ் லக்சுமணன் இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜி.ஆர். ஆர்ட்ஸ் நிறுவனமும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு டீசர் வெளியிடப்பட உள்ளது.