பவன் கல்யாணின் “ஓஜி” படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஆந்திர அரசு அனுமதி

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடிக்துள்ளார். ‘ஓஜி’ திரைப்படத்தில் ‘கண்மணி’ கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘ஓஜி’ படத்தின் டிரெய்லர் வரும் 21ம் தேதி காலை 10:08 மணிக்கு வெளியாக உள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஓஜி’ திரைப்படத்தின் 25ம் தேதி காலை 1 மணி சிறப்புக் காட்சிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், படத்தின் டிக்கெட் விலையாக ரூ.1000 வரை வசூலிக்கவும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. படம் வெளியாகும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 4 வரை, அனைத்து வழக்கமான நிகழ்ச்சிகளுக்கும் விலையை அதிகரிக்க ஆந்திர மாநில அரசு அனுமதித்துள்ளது. முதல் 10 நாள்களுக்கு சிறப்புக் காட்சி அல்லாத பிற காட்சிகளுக்கும் டிக்கெட்டை உயர்த்தி விற்கவும் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் ஸ்கிரீன் சினிமா டிக்கெட்டுகள் ரூ.125-க்கும், மல்டிபிளக்ஸ் டிக்கெட்டுகள் ரூ.150-க்கும் விற்கவும் அனுமதி அளித்துள்ளது.
சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்திருக்கும் நிலையில், அரசு என்பது டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டுமே தவிர, ஒரேடியாக ஏற்றக்கூடாது என எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.