தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் ரோபோ ஷங்கர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி மீண்டும் படங்களை, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் நேற்று காலை மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
தற்போது ரோபோ ஷங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தற்போது மருத்துவர்கள் தொடர் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.
ரோபோ ஷங்கர் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.